Dec 5, 2013

பெயரின் மறுபக்கம்!

1)P.T.உஷா - "பிளவுல்லகண்டி தெக்க பரம்பில் ".உஷா

2)S.P.பால சுப்ரமணியம் - " ஷ்ரிபதி பண்டித ராயுல ".பாலசுப்ரமணியம்.

3)K.J.ஏசுதாஸ்- "கட்டசேரி ஜோசப்". ஏசுதாஸ்.

4)A.R. ரஹ்மான் - "அல்லா ரக்கா. ரஹ்மான்" (அ) A.S. திலிப் குமார்

5)M.S.சுப்புலஷ்மி - மதுரை சுப்ரமணி அய்யர் .சுப்பு லஷ்மி

6)மனோ - நாகூர் பாபு

7)P.B. ஷ்ரினிவாஸ் - "பிரதிவாதி பயங்கரம் "ஷ்ரினிவாஸ்

8)மணிரத்னம் - "கோபால ரத்னம்" சுப்ரமணியன்

9)பாரதி ராஜா - P.சின்னசாமி

10)K.பாலசந்தர் - கைலாசம் பாலசந்தர்

11)சிரஞ்சீவி - கோனிடேலா சிவசங்கர வர பிரசாத்.

12)N.T.ராமா ராவ் - "நந்த மூரி தாரக".ராமராவ்

13)S.V.ரங்கா ரவ் - "சாமர்லா வெங்கட்ட" ரங்கா ராவ்

14)T.R.பாப்பா - சிவசங்கரன்

15)L.R. ஈஷ்வரி - "லூர்து மாரி" ஈஷ்வரி

16)S.G. கிட்டப்பா - செங்கோட்டை கங்காதர கிட்டப்பா

17)M.R.ராதா - மெட்ராஸ் ராஜகோபால. ராதா கிருஷ்ணன்.

18)சின்னி ஜெயந் - கிருஷ்ணமூர்த்தி நாரயணன்.

19)V.V.S.லஷ்மண் - வங்கி பரப்பு வெங்கட் சாய் லஷ்மண்

20)கவாஸ்கர் - சுனில் மனோகர் கவாச்கர்

21)கபில் தேவ் - கபில் தேவ் ராம்லால் நிகாஞ்





புகழ்பெற்ற பெயர் - இயற்பெயர்

ஜீசஸ் கிரைஸ்ட் - ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் - காப்பவர் , கிரைஸ்ட் - தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )

பாபர் - ஜாஹிர்ருதின்

ஹிமாயுன் - நஸ்ஸிருதின்

அக்பர் - ஜலாலுதின்

ஜெஹான்கிர் - நூருதின்

ஷா ஜெஹான் - குர்ரம்

அவ்ரங்கசெப் - ஆலம் கிர்

நூர்ஜஹான் - மெஹ்ருன்னிஸா

மும்தாஜ் - பானு பேகம்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் - மணிக்கர்னிகா

பூலித்தேவன் - காத்தப்ப துரை

மருது பாண்டி - மருதையன்

வீரபாண்டிய கட்ட பொம்மன் - கருத்தப்பாண்டி

ஊமைத்துரை - சிவத்தையா

தீரன் சின்னமலை - தீர்த்த கிரி

திருப்பூர் குமரன் - குமரேசன்

பாரதியார் - சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)

மருத நாயகம் - கான் சாகிப் யூசுப் கான்

மறைமலை அடிகள் - வேதாச்சலம்

பரிதிமாற்கலைஞர் - சூரிய நாரயண சாஸ்திரிகள்

திரு.வி.க - திருவாரூர் .விருத்தாசலம்.கல்யாண சுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)

கலைஞர் கருணாநிதி - தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)

எம்.ஜி.ராமச்சந்திரன் - ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் - மருதூர், ஜி - கோபால மேனன்)

ஜெ.ஜெயலலிதா - கோமள வல்லி

ரஜினி காந்த் - அனைவருக்கும் தெரியும் "சிவாஜி ராவ் கெயிக்வாட்" என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்று செல்லமாக அழைக்கப்பட்டர்!

May 23, 2013

தமிழீழத்தை ஐ.நாவில் முதன் முதலில் ஒலித்த கிருஷ்ணா வைகுந்தவாசன்!


இடம். நியூயார்க்.  அமெரிக்கா.

அப்போதைய இலங்கையில் நடந்து கொண்டுருந்த கோரங்களை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக ஒரு தனி மனிதர் செய்த புத்திசாலித்தனமான முயற்சி இது.

அங்கீகரிக்கப்பட்ட நாடுகள், பட்டியலில் உள்ள தலைவர்கள், இது போக தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் கொண்ட ஐக்கிய நாட்டு சபை கூட்டத்தின் ஒரு தமிழர் ஆங்கிலேய கணவான் போல் உள்ளே நுழைகிறார்.

எந்த அனுமதி சீட்டும் அவரிடம் இல்லை.  அவர் அழைப்பாளர் பட்டியலிலும் இல்லை.  எந்த நாட்டின் சார்பாளர்களின் பட்டியலிலும் இல்லை.

ஆனால் எப்படியும் உள்ளே நுழைந்து உரையாற்றி "தமீழழம்" என்ற வார்த்தையை பதிவு செய்து விட வேண்டும்.  மொத்த நாட்டு தலைவர்களுக்கும் தெரிவித்து விட வேண்டும்.  பின்னால் வரும் விளைவுகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவோடு உள்ளேயும் நுழைந்து விட்டார்.

ஒரு வாரமாக வாசலின் ஒரு ஒரமாக நின்று மொத்த ஐ.நா இயக்கத்தையும்,  அனுமதிக்கும் முறைகளையும் வெளியில் நின்று கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தார்.

1978 அக்டோபர் 5 பகல்பொழுது.,அவர் அணிந்துருந்த கோட் சூட், கையில் வைத்துருந்த சிறிய கோப்புகள் அடங்கிய சூட்கேஸ் போன்ற மொத்த அவருடைய தோற்றமும் ஒரு நாட்டின் பிரதிநிதி போல் தோற்றமளித்த காரணத்தால் வாசலில் நின்றவர்களின் பார்வையில் இருந்து எளிதாக தப்பி உள்ளே நுழைந்து விட்டார்.

அவர் உள்ளே நுழைந்த நேரம் மதிய இடைவேளை உணவுக்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது.

ஐ.நா. பொதுப்பேரவையில் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளும் மேடையேறி உரையாற்றிக்கொண்டுருந்தனர்.  சைப்ரஸ். அதற்கடுத்து ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் வந்து உரையாற்ற வேண்டும்.

ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சருக்கான அழைப்பு மேடையில் இருந்து அழைத்த போது எவரும் சற்றும் எதிர்பாரா தருணத்தில் மேடையில் ஏறியவர், ஒலிப்பெருக்கி முன் நின்ற உரையாற்றத் தொடங்கினார்.

"பேரவைத் தலைவர் அவர்களே, உலகத் தலைவர்களே!

அருள் கூர்ந்து என்னை ஒரு மணித்துளி பேசுவதற்கு அனுமதியுங்கள்.

ஸ்ரீலங்காவில் தமிழ் ஈழம் போன்ற ஓடுக்கப்படும் சிறுபான்மை மக்களை கொண்ட நாடுகள், உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது?

என் பெயர் கிருஷ்ணா என்ற வைகுந்த வாசன்.  இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள 35 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட "தமிழீழம்"  என்ற நாட்டில் இருந்து பிரதிநிதியாக வந்துருக்கின்றேன்.

ஸ்ரீலங்கா அரசு சிறுபான்மை இனத்தை துன்புறுத்தி ஒடுக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.  தனிநாடாக வாழ்வதற்கு எங்களுக்குள்ள உரிமையை நாங்கள் பயன் படுத்துவதற்கு அறிவித்துள்ளோம்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சிங்களர் உருவாக்கும் வனமுறைப் போராட்டங்கள் மிகுந்த இன்னல்களை எங்களுக்கு உருவாக்கிக் கொண்டுருக்கிறது.

உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், நாளை எங்கள் பிரச்சனையும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் போல் சைப்ரசு போராட்டம் போல, உருவாகும். உருவெடுக்கும்."

ஆங்கிலத்தில் மடமடவென்று தெள்ளத்தெளிவாக ரத்னச்சுருக்கமாக மிக விரைவாக உரையாற்றி முடித்த போது மிகப் பெரிய நிசப்தமும் தொடர்ந்து சலசலப்பும்.

நிமிடத்திற்குள் உரையாற்றிய வேகமும், தெளிந்த ஆங்கில வார்த்தைகளும் சபையை புரட்டிப்போட்டது.  பணியாளர் ஓடிவந்து ஒலிப்பெருக்கியை நிறுத்துவதற்கு முன் தன்னுடைய உரையை முடித்து இருந்தார்.  இலங்கையின் வெளியுறவு அமைச்சர் வந்து சேர்வதற்குள் தான் பேச விரும்பியதை முழுமையாக சொல்லிவிட்டார்.


    
இதுவரையிலும் அங்கே அமர்ந்து இருந்த
இந்திரா காந்தி உடன்
தலைவர்களுக்கும் இந்த "தமிழீழம்"  என்ற தெரியாத வார்த்தையை அவர்களின் உதடுகள் உச்சரித்த போது காவலர்கள் தன்னை நோக்கி வருவதற்குள் மின்னலென வாசல் புறம் ஓடி மறைந்தார். பிறகு இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

அப்போது நடந்த இந்த திடீர் குறுக்கீட்டை, பன்னாட்டு வானொலிகளும், தொலைக்காட்சிகளும், லண்டன் பிபிசி வானொலியும் ஒலிப்பரப்பின.
நியூயார்க்கில் இருந்து வெளிவரும் "இந்தியா அப்ராட்" என்ற தினசரியில்
செய்தியாளர் திரு. கூப்பர் என்பவர் பின்வருமாறு எழுதினார்.

"தமிழீழ விடுதலை முழக்கத்தை முதன் முதல் ஐ.நா. பேரவையில் ஒலித்த திரு. வைகுந்தவாசனின் தீரச்செயல் மிகமிகப் பாராட்டத் தக்கதே"

யாழ்ப்பாணத்தில் அளவெட்டியில் பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தராகப் பணியாற்றி, அரசு எழுத்தர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். 1950களில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார்.
ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டார். 1971 இல் சாம்பியா நாட்டில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்று சென்றார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆகத்து 1978 இல், இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணியாற்றியபோது நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க வழக்குரைஞர்கள் கழகத்தின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்

சென்னை நீதிமன்றத்திலும் வக்கீலாக பணியாற்றியவர்.  ஆப்பிரிகா கண்டத்தில் உள்ள சாம்பியா (Zambia) நாட்டில் ஏழு ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி பின்னாளில் லண்டனில் நிரந்தரமாக குடியேறியவர்.
"அன்புமொழி " போதித்த புத்தன் கூறிய போதனைகள் ஆண்ட அத்தனை கிறிஸ்துவ சிங்கள தலைவர்களுக்கு புரியவில்லை. உணர்ச்சிகளால் மட்டும் வளர்க்கப்பட்ட, வளர்ந்த சிங்கள மக்களும் கேட்கும் மனநிலையிலும் இல்லை.  மொத்தத்தில் அவர்கள் மனதில் நல்ல சிந்தனைகளும் இன்று வரையிலும் உருவாகவில்லை.
"காந்திய மொழியே மொத்த வாழ்க்கை"என்று அறப்போராட்டத்தை நம்பி முன்னெடுத்த போராட்டங்கள் மொத்தமும் அன்றைய தமிழன தலைவர்களுக்கு மிகப் பெரிய படிப்பினையே இறுதியில் தந்தது.

1957ல் தந்தை செல்வா மேலை நாட்டு(இங்கிலாந்து) ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில்   " ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போதே இவர்களுடன் எந்த காலத்திலும் இணைந்து வாழவே முடியாது என்று அன்றே தனி நாடு கேட்டு வாங்காமல் எதிர்கால தமிழனத்திற்கு மிகப் பெரிய மோசமான முன் உதாரணமாக இருந்து தொலைந்து விட்டோம்"  என்று அவரை கடைசி வரையிலும் வருத்தப்படச் செய்தது.

" பொறுத்தாள்வார் பூமி ஆழ்வார் " என்ற வாசகம் பழைய பஞ்சாங்கமாக மாறி பரணில் ஏறியது.

" இனி தமிழனை அழிக்க வேண்டும் என்று சிந்தனை வந்தாலே அச்சப்படும் அளவிற்கு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் " என்ற ஆயுத போராட்ட இளைஞர்கள் தோன்றினர்.

அன்று ஆளுமைப்படுத்தவும், இளைஞர்களை அமைதிப்படுத்தவும்,  தந்தை செல்வாவிற்கு பிறகு ஆட்களுமில்லை.  அவருக்குப் பிறகு தோன்றிய தலைவர்களும் தன்னலமற்று சொல்லும் அளவிற்கு வாழவும் இல்லை.

இனி.........?

ஆரம்ப மொழி......
ஆயுதமொழி.......
ஆயுதப்பாதைகள்..
குருதியில் நனைந்த ஈழம்..........
முடிக்கப்பட்டதாய் சொல்லப்படும் "தமிழீழம்".................?
மொத்தத்தில் கண்ணீர் தீவு.............

Jan 14, 2013

அசைவம் மனிதனின் தேவையா அல்ல ஆசையா?






மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதல் இடம் என்றுமே உணவுக்கே ஆகும். மற்ற விலங்குகளைப் போலவே மனிதனிற்கும் இயற்கையாகத் தோன்றும் பசி எனும் தேவையினைப் போக்கவே எமக்கு உணவு தேவைப்படுகின்றது. எனினும் இன்று நாம் பசியை ருசியாகப் பார்க்கின்றோம். இன்று நாம் உணவை ருசிக்காகவே உண்கின்றோம். சரி விடயத்திற்கு வருவோம். உணவு முறைகளில் சைவ உணவு முறைதான் சிறந்ததாகும். இதனையே எமது மதங்கள் தொட்டு இன்றைய நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூட இதனையே சொல்கின்றன. சரி உணவைப் பற்றி எமது சமயங்கள் என்ன சொல்கின்றன என பார்ப்போமானால். கிறிஸ்த்தவ சமயத்தவர்களின் முதல் நூலாகிய பைபிளின் முதலாகமத்தில் கடவுள் உலகத்தை தோற்றுவித்து. ஆதாம், ஏவாளைப் படைத்த பின் அவர்களை நோக்கி “நிலத்தின் மேலுள்ள வித்துக்களைத் தரும் ஒவ்வொரு பூண்டினையும், வித்துக்களோடு பழத்தையும் தரும் ஒவ்வொரு மரத்தையும் நான் தங்களின் உணவுக்காக தந்திருக்கிறோன். இவற்யை உமக்கு உணவாக்குக” என கூறி அருளினார் என விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. புத்த சமயத்திற்கு முற்ப்பட்ட சமண சமயமானது கொல்லாமை, புலால் உண்ணாமை உண்ணும் அறத்தின் கண் தலை சிறந்தது என்று வருதலும் எல்லோரும் உணர்ந்ததாகும். எனினும் மனிதனின் மிதமிஞ்சிய அவா அவனை முழு அசைவ உண்ணியாக மாற்றியுள்ளது. நூன் அறிந்த உண்மை அசைவம் கண்ணை மறைக்கும் அசைவ விரும்பிகளின் கருத்து யாதெனில். அசைவ உணவுகளே சத்து நிறைந்தவை, அசைவமே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, வழி வழியாக சாப்பிட்டு வரும் முறையிலிருந்து மாறுபட விரும்பாமல் வருந்துகின்றோம், ருசிக்கு நாக்கும் மனமும் பழகி விட்டது, சந்தர்ப்பம் அமைவதில்லை இவையே இவர்களின் பெறுமதிமிக்க கருத்துக்களாகும். இப்படியான போலி சாட்டுக்களை கைவிட்டு சைவத்தை நாடினால் யாருக்கு நன்மை கிடைக்ம். என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை போல. சைவ உணவுகளை உண்பதால் உண்டாகும் நன்மைகளைப் பார்ப்போமானால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டவை. சைவ உணவுகளின் செரிமானம் எளிதாக நடைபெறும், உடலில் கிருமிகள் தங்க இடம் கொடுக்காது, உடலின் எடை அதிகரிக்காது, சைவ உணவுகளில் நார்ச் சத்துக்கள் அதிகமாகக் கொண்டிருப்பதால் மலச்சிக்கல் இருக்காது. நன்கு பசி உண்டாகும், மனதிற்கும் உடலிற்கும் ஓர் புத்துணர்ச்சியினைக் கொடுக்கும் வல்லமை கொண்டமை சைவ உணவுகள். இப்படி சைவ உணவினால் உண்டாகும் நன்மைகளினை அடுக்கிக் கொண்டே போகலாம். மாமிசத்திலும் பார்க்க கீரைகள், தானியங்கள், மரக்கறி காய் வகைகள் இவற்றிலுள்ள ஊட்டசத்து இரு மடங்காக உள்ளது என்பதை நாம் அறிந்ததில்லை. மாமிசத்தில் இருக்கும் புரதத்திலும் பார்க்க பட்டானியிலும், கடலையிலும் இருக்கும் புரதம் இரு மடங்காகும். சில புத்தி மான்களின் கருத்து யாதெனில் இவ்வுலகில் மற்றைய விலங்குகளைப் படைத்தது மனிதனின் பசியைப் போக்கத்தான் என்கின்றனர். சரி அப்படியானால் உதாரணம் ஒன்றைப் பாப்போம். சிங்கம், புலி என்பவை பிறவி அசைவ உண்ணி விலங்குகளாகும். இவ் விலங்குகளின் உடல் அமைப்பினைப் பாருங்கள் கூரிய நகங்கள், கூரிய பற்கள், பாய்ந்து ஒரு விலங்கை வேட்டையாடத்தக்க கால்கள் உடலமைப்பைக் கொண்டு காணப்படுகின்றது. இறைவன் மனிதனுக்கு அமைத்துள்ள உடலமைப்பினைப் பாருங்கள். மனிதால் இவ்வுலகில் எந்தவொரு ஆயுதமும் இல்லாமல் ஒரு சிறு விலங்கையாவது பிடித்து வேட்டையாட முடியுமா அல்லது கொல்லத்தான் முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள் மனிதன் சைவ உண்ணியாகவே படைக்கப்பட்டுள்ளான். மனிதர்களாகிய நாம் பிறவிச் சைவர்கள். மனிதன் கருவிகளையும் ஆயுதங்களையும் கண்டுபிடிக்க முன்னர் எந்தவொரு விலங்கினத்திற்கும் தீங்கு செய்யாது. மனிதன் இய்கையோடு இணைந்து வாழ்ந்தான். ஆயுதங்களை கண்டுபிடித்த பின்னரே அவன் வேட்டையாடத் தொடங்கினான். இயற்கையில் மனிதனின் அக, புற உடலமைப்புக்கள் சைவ உணவுகளுக்கு ஏற்ற விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மாமிசம் போன்றவற்றை கிழித்து உண்பதற்கு ஏற்ற வகையிலான முன் கூர்மைப் பற்கள் மனிதனுக்கு இல்லை, மாமிச பட்சிணிகளுக்கு குடல் சிறிதாக இருக்கும். ஆனால் எமது குடலோ மிக நீண்ட சுருள் சுருளாக அமைக்கப்பட்டுள்ளது. என்பது நீங்கள் அறிந்த விடயம். இதனால் அசைவ உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கின்றது. இதனால் உடலில் நச்சுத்தன்மை ஏற்ப்படுகின்றது. இதுவே மனிதனின் அழிவுக்கு வழி செய்கின்றது. மற்றம் இயற்கையாக மாமிச பட்சிணியாக படைக்கப்பட்ட விலங்குகளுக்கு நாக்கில் வியர்க்கும் அவற்றின் உமிழ்நீர் அமிலத் தன்மையாகக் இருக்கும். ஆனால் மனிதனிற்கு ஆடு, மாடு மான், யானை போன்ற சைவ பட்சிணிகளைப்போன்று நாக்கில் வியர்ப்பதில்லை. எனவே இப்போது மனிதன் சைவ உணவுகளிற்கு ஏற்ற வகையிலேயே தான் மனிதனின் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று உங்களிற்கு புரிந்திருக்கும் அசைவ உணவுகள் மனிதனிற்கு தீமைகளை வாரி வழங்குகின்றன என்பது நாம் அறிந்தும் அறியாதபோல் இருக்கும் விடயமாகும். மரக்கறிகளிலும், பழங்களிலும் பூச்சிகொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவது உண்மையாகும். இது எமது உடலிற்கு பெரும் பாதிப்பை ஒரு போதும் ஏற்ப்படுத்தாது. ஆனால் மாமிசத்திற்காக வளர்க்கப்படும் மிருகங்களும் இவற்றைத்தான் உண்கின்றன. மரக்கறிகள், பழங்கள் அவற்றில் தங்கியுள்ள பூச்சிகொல்லி மருந்தின் அளவை விட அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து மாமிசத்திற்காக வளர்க்கப்படும் மிருகள்களில் காணப்படுவதாக ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. மனிதன் வாழ்வதும் சாவதும் உணவால் அதற்கு அமைவாக அசைவ உணவுகளினை தொடர்ந்து உண்பதால் எமது உடலில் முதலில் மிகவும் பாதிக்கப்படும் உருப்பு சிறுநீரகம் ஆகும். அசைவம் உண்ணுவதால் இரத்தத்தில் தோன்றும் விசத்தன்மையை நீக்க பெரிதும் போராடுகின்றது சிறுநீரகம். அசைவ உணவுகளால் சைவ உணவு உண்பவர்களின் சிறு நீரகத்தை விட மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உடபடுகின்றது சிறுநீரகம். ஆசைவ உணவு செரிமானம் ஆகும் போது புலால் உணவிலிருந்து வெளிப்படும் சக்தி புற்று நோய் உண்டாககும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. அனைவரும் அறிந்த விடயம் இஸ்லாம் மதத்தவர்களின் அன்றாட உணவாக மாமிசம் காணப்படுகின்றது. வைத்தியசாலைகளில் பார்தீர்களானால் முதலிடத்தில் இருப்பது இஸ்லாம் மதத்தவர்கள். பத்திரிகைகளைப் பார்த்திர்களானால் தினசரி ஓரு விளம்பரம் சிறுநீரகம் தேவை. இவையல்லாம் எதனால் ஏற்படுகின்றது. நீங்கள் போசக்கான உணவு என உண்னும் மாமிசத்தால் தானே! சரி விடயத்திற்கு வருவோம். அசைவ உணவுகள் அதிக கொழுப்புத்தன்மை கொண்டதாககவும் குறைந்த நார்ச்சத்து கொண்டதாகவும் இருப்பதால் செரிமானம் நடைபெற அதிக நேரமாகின்றது. அதனால் மலச்சிக்கல் தோன்றுகின்றது. இந்த மலச்சிக்கலே வேறு பல நோய்களை உண்டு பண்னும் திறமை கொண்டதாகும். அசைவ உணவுகளை பற்றிய முக்கியமான விடயம் யாதெனில் உணவுகயுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு கொழுப்பு ஏற்றுவதற்காக 270 வகையான ஹோர்மோன்கள் கொடுக்கப்படுகின்றன என்பது எம்மை வியக்க வைக்கும் ஓர் உண்மையாகும். இம் மருந்தின் செயல்ப்பாடு விலங்கு பிறக்கும் முன்பே தொடங்கி பின்னும் நாம் அதன் மாமிசத்தை உண்பதாலும் எம்மூலம் தொடர்கின்றது. சைவ உணவுகளால் மனிதனின் நோய் எதிர்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாது. மனிதனின் இரத்த ஓட்டம் வேகமாக நடைபெறவும் சைவ உணவுகள் துணைபுரிகின்றன.. விளக்கமாக சொல்லப் போனால் ஓடும் தண்ணீரில் நுளம்பு தங்குவதில்லை. அதேபோல் ஓடும் இரத்த ஓட்டத்தில் எந்தக் கிருமிகளும் தங்காது. அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதை உணர்ந்து பெரும்பாலான வெளிநாட்டவர்கள் அசைவத்தை முற்றாக கைவிட்டு சைவத்திற்கு மாறுகின்றனர். ஆனால் காணததை கண்டவர்கள் போல் நம்மவர்கள்; அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். உலகப் பரசித்தி பெற்ற ஐன்ஸ்டைன், பெர்னாட்சா போன்றவர்கள் அசைவத்திலிருந்து சைவத்து மாறியவர்களே ஆவர். அசைவம் உண்பவர்களிற்கு நுண்ணுணர்வும் பேரரிவும் இல்லாமல் போவதோடு உடம்பும் பொலிவிலந்து போகின்றது. அதை அசைவம் உண்பவர்கள் நன்கு அறிவர். அசைவ உணவுகள் மனிதனின் உடலை மட்டுமல்லாது மனதையும் அழுக்காக்கின்றது. இதற்கு உதாரணமாக சைவ உணவு உண்பவர்களைவ விட அசைவ உணவு உண்பவர்களே அதிக குற்றவியல் நிகழ்ச்சிகளில் இடுபடுகின்றனர். ஒரு உயிரினைக் கொண்று அதன் சதையை சுவைக்கும் குணம் படைத்தவனின் மனம் மாசானதாக தானே இருக்கும் பாசம் பரிவு இவை அவன் கண்களிற்கு புலப்படாது. எல்லாம் போலியாகவே இருக்கும். கனியிருக்க காயைக் கவர்வது தான் மனித இயல்பு. எத்தனையோ வகையான போசாக்கு நிறைந்த பச்சை காய் கனிகள், கீரைகள் இருக்க ஏன் இறந்த ஒரு விலங்கின் சடலத்தை புசிப்பதற்கு மனிதன் ஆசைப்படுகின்றான். சுவைக்காக உண்கின்றான் என்றும் கூறமுடியாது மரக்கறிகளில் இல்லாத சுவையா மாமிசத்தில் உள்ளது. அதற்கு காரணம் மனிதனின் அவா என்று தான் கூற வேண்டும். சைவ உணவுகளை நீங்கள் தினமும் உண்பதால் நீங்கள் ஒன்றும் மடிந்து விட மாடடீர்கள். நீங்கள் தான் ஆரோக்கியம் நிறைந்த சமூகத்தினை உருவாக்குவீர்கள். உங்களின் வாழ்க்கைச் செலவு குறையும் மாமிசத்திற்கும் போசாக்கான மரக்கறிகளுக்குமான விலையை சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் மாதம்தோரும் வைத்தியசாலையை நாடவேண்டிய அவசியமில்லை. நீங்கள் சைவத்தை நாடினால் உங்களிற்கும் நன்மை கிடைக்கும் வாயில்லா ஐந்தறிவு விலங்குகளிற்கும் நன்மை கிடைக்கும். உடனடியாக அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை படிப்படியாக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். சைவ உணவு எமது உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி மன ஆரோக்கியத்தையும் தேக ஆரோக்கியமும் ஆற்றலும் கிட்டி, ஆயுள் கூடி, பெரு வாழ்வு கிட்டும் என இயற்கை விதி கூறுகின்றது. எனவே சைவத்தை உண்டு நலமாய் வாழ முயற்சியுங்கள். உங்கள் முடிவு  உங்கள் உணவில்.