Aug 30, 2012

அபிவிருத்தியின் பெயரால் கிழக்கை இழந்த வரலாறு (பாகம் இரண்டு)

பகுதி 2
ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற பதம் முற்றாகவே அற்றுப்போய் அபிவிருத்தி என்ற ஒரு மாயை எமது இனத்தை சூழந்து வரும் இந்த வேளையில் தாயகத்தின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் முன்னெடுத்த அபிவிருத்தியின் விளைவுகள் என்ன?தற்கால அரசியலில் நாம் சந்திக்கப்போகும் பின்னடைவுகள் என்ன என்பது குறித்து ஆதாரங்கள் மற்றும் வரலாற்றுத் தகவல்களை ஒன்று திரட்டி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் யாழ் மாவட்ட முன்னாள் வேட்பாளரும், பிரபல பொருளியல் விரிவுரையாளருமான திரு சி வரதராஜன் அவர்கள் ஈழம் ஈ நியூஸ் இற்காக (www.eelamenews.com) எழுதும் தொடர் இது.
இலங்கை அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பது சிங்கள மக்களை தமிழர் தாயகத்தில் குடியமர்த்துவதையே நோக்கமாகக் கொண்டது என்பதையே கடந்தகால அனுபவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
தமிழர் தாயகத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய அபிவிருத்தித் திட்டம் கல்லோயா அபிவிருத்தித் திட்டமாகும். 1949ம் ஆண்டு 51ம் இலக்கச் சட்டத்தின்கீழ்  கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டது. இச் சட்டத்தின்படி இச் சபையின் பிரதான நோக்கமாக ‘அதனது அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஆகக்கூடுதலான எண்ணிக்கையிலான இலங்கைப் பிரஜைகளின் குடும்பங்களைக் குடியமர்த்த வேண்டும்’ என்பது வரையறுக்கப்பட்டது.
இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியான திரு.டீ.எஸ். சேனநாயக்கா 1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி இங்கினியாகலையில் கல்லோயாத் திட்டத்தின்கீழ் முதல் மரத்தினை சம்பிரதாயபூர்வமாக தமது கையால் வெட்டி இத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தபோது பின்வருமாறு கூறினார்.
‘இன்று என்னால் வெட்டப்பட்ட முதல் மரம் இப்பிரதேச அபிவிருத்தியில் முதற் கருவாக்கத்தின்; மூலக்கூறு. இக்கரு தொடர்ந்து வளர்ச்சியுறவேண்டும். இக் கரு சிதைவடையாமல் பாதுகாக்கப்படவேண்டும். இது இப் பிரதேச மக்களின் தலையாய கடமையாகும். கடற்கரைப் பிரதேசத்தில் தான் அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள். இம் மக்கள் கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வாழவேண்டும். அவ்வாறு அவர்கள் வந்து குடியேறாவிட்டால் பிற பிரதேசத்தவர்கள் இங்கு வந்து குடியேறுவார்கள்.’
திரு.டீ.எஸ். சேனநாயக்காவின் பேச்சின் இறுதி வசனம் கல்லோயாத் திட்டத்தின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. பிற பிரதேசத்தவர்கள் என்பது சிங்களவர்களைத் தவிர வேற எவரையும் குறிக்கமாட்டாது என்பது வெளிப்படை.
எனவே சிங்கள மக்களைப் பெருமளவில் இப் பிரதேசத்தில் குடியமர்த்துவதனை நோக்கமாகக் கொண்டே கல்லோயாத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை திரு.டீ.எஸ். சேனநாயக்கா தனது அங்குரார்ப்பண உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் கல்லோயாத் திட்டப் பிரதேசத்தில் முதல் மரத்தை வெட்டிச் சாய்க்கின்றபோது ‘இப் பிரதேசத்தில் பரம்பரையாக வேரூன்றியிருக்கும் தமிழ் இனத்தை இம் மரத்தினைப் போலவே அடியோடு வெட்டிச் சாய்க்கவேண்டும்’ என்று எண்ணியிருப்பாரோ தெரியவில்லை.
தமிழர் தாயகத்தைச் சூறையாடி தமிழ் மக்களை அகதிகளாகத் துரத்தியடித்து அப் பிரதேசங்களை சிங்களமயமாக்குவது என்ற அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டத்தின் முதல் அடியே கல்லோயாக் குடியேற்றத் திட்டமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்த அதேகாலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியில் அல்லைஇ கந்தளாய் குடியேற்றத் திட்டங்களையும் அரசாங்கம் ஆரம்பித்தது. இவற்றின் விளைவாக கிழக்குமாகாணத்தின் வடபகுதியும் தென்பகுதியும் சமகாலத்தில் சிங்களமயமாக்கலுக்கு உள்ளாகியது.
இக் குடியேற்றத் திட்டங்களின் விளைவுகளை இவ்விரண்டு மாவட்டங்களின் சனத் தொகைப் பரம்பலில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடியும். 20ம் நூற்றாண்டின் முதலாவது குடிசன மதிப்பீடு 1901ம் ஆண்டும் இறுதிக் குடிசன மதிப்பீடு 1981ம் ஆண்டும் மேற்கொள்ளப்பட்டது.
1901ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியாக அப்போதிருந்த தற்போதைய அம்பாறை மாவட்டப் (கல்லோயாக் குடியேற்றத் திட்டம் ஆரம்பித்துப் பத்தாண்டுகளின் பின் (1961ம் ஆண்டு) மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது) பிரதேசத்தில் 6175 சிங்களவர்கள் மாத்திரம் வாழ்ந்தனர்.
இது இப் பிரதேசத்தின் மொத்த சனத் தொகையில் 9.8 சதவீதம் மட்டுமேயாகும். இந்த 6175 பேரில் 3302 பேர் (54 சதவீதத்தினர்) மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களை அண்டியுள்ள பிந்தனபற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகும். மேலும் 994 பேர் (16 சதவீதத்தினர்) அம்பாந்தோட்டை மற்றும் மொனராகல மாவட்டங்களை அண்டியுள்ள பாணமை பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகும்.
1981ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்படி அம்பாறை மாவட்டத்தில் 1,46,943 சிங்களவர்கள் வாழ்ந்தனர். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 37.8 சதவீதமாகும். மேலும் அம்பாறை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 78.3 சதவீத பிரதேசத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தின் சாதனை இதுவேயாகும்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில்  1901ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்படி  1203  சிங்களவர்கள் மாத்திரம் வாழ்ந்தனர். இது இப் பிரதேசத்தின் மொத்த சனத் தொகையில் 4.2 சதவீதம் மட்டுமேயாகும். இந்த 1203 பேரில் 614 பேர் (51 சதவீதத்தினர்) அனுராதபுரம் மாவட்டத்தை அண்டியுள்ள கட்டுக்குளம்பற்று மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகும். மேலும் 314 பேர் (26 சதவீதத்தினர்) திருகோணமலை நகரத்தில் வாழ்ந்தவர்களாவர்.
1981ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்படி திருகோணமலை மாவட்டத்தில் 97550 சிங்களவர்கள் வாழ்ந்தனர். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 35.6 சதவீதமாகும். மேலும் திருகோணமலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீத பிரதேசத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இத அல்லை. கந்தளாய்க் குடியேற்றத் திட்டங்களின் சாதனையாகும்.
மறைந்த தந்தை செல்வநாயகம் அவர்கள் 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில்  பின்வருமாறு கூறினார்.    பல்தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் தொடர்ந்து வாழ்வதற்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. முதலாவது, எண்ணிக்கை ரீதியான பலம். இரண்டாவது, அதனது வாழ்விடம். ஆனால் இம் முன்தேவைகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் தகர்க்கப்படுகின்றன. ஏழு இலட்சம் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்பானது தமிழ் மக்களின் வாக்குப்பலத்தை அரைவாசியாக் குறைத்துள்ளது.
இப்பொழுது இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைப் பறிக்கின்றது. இன்று இது கல்லோயாவில். நாளை இது கந்தளாயில் நடைபெறும். பின்னர் பதவியா, வவுனியா, மன்னர் எனத் தொடரும். இந் நடவடிக்கையின் ஆரம்பமாக அமைந்துள்ள கல்லோயாத் திட்டத்தினால் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தாங்கள் வாழும் பிரதேசங்களில் சிறுபான்மைச் சமூகங்களாக மாறிவிடுவர். தந்தை செல்வநாயகம் அவர்கள் 1951ம் ஆண்டு கூறிய விடயம் இன்று எம் கண்முன்னால் நிகழ்ந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
அபிவிருத்தியின் பெயராலேயே இம் மாற்றங்கள் அனைத்தும் நிகழ்ந்தன. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து 1980 வரை தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகவும் வாழ்விடங்களுக்காகவும் அமைதியானமுறையில் சாத்வீகமான வழிகளில் போராடினர். அக்காலப்பகுதியில்தான்  தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு சொந்த மண்ணில் சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர்.
1980 வரை  தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காக அகிம்சைவழியில் போராடினர். அப் போராட்டங்களை அரசாங்கம் சிறிதும் பொருட்படுத்தாமல் தனது இரும்புக் கரங்களால் அடக்கியவாறு சிங்களமயமாக்கலைத் தொடர்ந்து மேற்கொண்டது. 1980களிலிருந்து தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயதப் போராட்டமாக மாறியது. இப் போராட்டம் 2008 வரை அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளாதவாறு தடுத்து வைத்திருந்தது. இவ் ஆயுதப்போராட்டமும் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் மீண்டும் அதிதீவிரத்துடன் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதனைக் காணக் கூடியதாவுள்ளது.
தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களும்சரி ஆயுதப் போரட்டங்களும்சரி அரசாங்கத்தினால் முறியடிக்கப்பட்டாலும் கூட இப் போராட்டங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த காரணங்கள் இன்றும் உயிருடன்தான் இருக்கின்றன.
24 மணிநேர லக்ஸபான மின்சாரம், யாழ்தேவி புகையிரதசேவை, தடையில்லாத வீதிப் போக்குவரத்து, இராணுவ மற்றும்; போலீஸ் கெடுபிடியின்றி நள்ளிரவிலும் நடமாடுதல், நள்ளிரவு வரையிலான கோயில் திருவிழாக்கள், விடிய விடிய இசைக் கச்சேரிகள் இவைதான் இன்று மக்களின் தேவைகளாகக் காட்டப்படுகின்றன. இவைகள் இல்லாமலிருந்ததுதான்; தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்றும் எனவே இவற்றை வழங்கும்போது தமிழ்மக்களின் பிரச்சைனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றவகையிலான ஒரு கருத்துருவாக்கம் இன்று ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. இன்றைய இளையசமுதாயத்திற்கு இவ்வாறான கருத்தே ஊட்டப்பட்டு வருகின்றது.
ஆனால் இன்று எவையெல்லாம் தமிழ் மக்களுக்குத் தேவை என்று கூறுகின்றோமோ அவையெல்லாம் நாம் ஏற்கனவே 1980 களுக்கு முன்னர் நாம் அனுபவித்துக் கொண்டிருந்தவைதான். இவை எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இளைஞர்கள் ஏன் ஆயதம் தூக்கினார்கள் – தமிழ் மக்கள் ஏன் அதற்கு ஆதரவு வழங்கினார்கள் இதற்கான காரணங்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டன அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன.
போராட்டம் தோன்றியமைக்கான காரணங்கள் – பிரச்சனைகள் இன்று மறைந்து போராட்டம் தோன்றியதன் காரணமாக உருவான பிரச்சனைகளே இன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளாகும் என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. எனவே அவற்றைத் தீர்த்துவிட்டால் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பிரச்சனைகளே கிடையாது என்றவொரு கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது.
போராட்டம் நடைபெற்றதனால் உருவாகிய பாரிய பிரச்சனை மக்களின் இடப்பெயர்வாகும். இப் பிரச்சனையின் தன்மையையும் தாக்கத்தையம் குறைத்து மதிப்பிடமுடியாது. குறிப்பாக வன்னி மக்கள் படும் அவலம் எவரையும் கண்ணீர்விட வைக்கும். எனவே இவர்களின் துயரத்திற்கு முதலில் முடிவு கட்டவேண்டியது அவசியமாகும். ஆனால் அரசாங்கம் மீள்குடியமர்த்தல் என்றபோர்வையில் வடக்கில் சிங்களவர்களைக் குடியமர்த்த எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டியது அவசியமாகும். யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கம் காட்டும் அவசரத்தையும் அக்கறையையும் அதே யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விடயத்தில் ஏன் காட்டவில்லை.?
யுத்தம் முடிந்த ஒரு வருடத்திற்குள் வன்னியிலும் யாழப்பாணத்திலும் சிங்கள மக்களைக் குடியமர்த்த முடியுமாயின்இ யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் மக்களை ஏன் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாதுள்ளது?
எனவே அரசாங்கம் 1950 – 1980 காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் எவ்வாறு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டதோ அதேபோன்று எதிர்வருங்காலங்களில் வடக்கையும்,  சிங்களமயமாக்கப் போகின்றது. நேற்று கிழக்கில் நடந்தது. இன்று வடக்கில் நடைபெறத் தொடங்குகின்றது. நாளை அது தீவிரமடையும். ஆனால் ஓரேயொரு வேறுபாட்டை மட்டும் அவதானிக்கலாம்.
அன்று கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றபோது  கட்சிபேதமின்றி அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் அதனைத் தீவிரமாக எதிர்த்தனர். ஆனால் இன்று வடக்கில் நடைபெறப்போகும் சிங்களக் குடியேற்றங்கள் பதவியிலிருக்கும் பல தமிழ் அரசியற் தலைவர்களின் ஆசியோடும்  ஒரு சிலரின் போலியான எதிர்ப்புடனும்  அரங்கேறப் போகின்றது என்பதுதான் வேதனையான விடயம்.
அபிவிருத்தி என்ற பெயரில் ஒரு குழந்தையை எமது கையில் ஒப்படைத்துவிட்டு எம்மிடமுள்ள தொட்டிலைப் பறிக்கப் போகின்றார்கள். குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு வாழ்விடமின்றி சிறிது காலம் நாடோடிகளாகத் திரிவோம். பின்னர் குழந்தையும் இறக்கும். நாமும் அழிவோம்.
அபிவிருத்தி என்று கூறி கிழக்கின் வடபகுதியையும் (திருகோணமலை மாவட்டம்) தென் பகுதியையும் (அம்பாறை மாவட்டம்) இழந்துவிட்டோம். இனி இவற்றை மீளப் பெறமுடியாது. எஞ்சியிருப்பது மட்டக்களப்பு மாவட்டமும் வடமாகாணமும் தான். இவற்றையும் தொலைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. எல்லைகளை நோக்கி நாம் நகராவிட்டால் எல்லைகள் எம்மை நோக்கி நகரும்

1977ம் ஆண்டுத் தேர்தலில்தான் சேருவல என்ற சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டு எச்.டி.எல்.லீலாரட்ன என்ற சிங்கள இனத்தவர் முதல் தடவையாக இம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டார். உண்மை இவ்வாறிருக்க ஏதோ அண்மையில்தான் திருகோணமலை பறிபோய்விட்டது மாதிரியும் திருகோணமலைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தான் அதனைக் காப்பாற்றப் போகின்றோம் என்ற மாதிரியும் பலர் பேசுகின்றனர், எழுதுகின்றார்கள். இவ்வாறு பேசுபவர்கள் உண்மையில் திருகோணலையைக் காப்பாற்றப் பாடுபடுகின்றீர்களா? அல்லது சம்பந்தரைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களா? இலங்கை சுதந்திரம் பெற்ற அடுத்த 30 வருடங்களாகப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தின் மூலம் திருக்கோணமலையைக் காப்பாற்ற முடியாமல்போன நீங்கள் இப்போது யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகின்றீர்கள்.

1921-1946 காலப்பகுதியில் புகையிரதப் பாதை அமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றின் பெயரிலேயே திருகோணமலை நகரத்தில் பெருமளவு சிங்களவர்வர்கள் குடியேறினர். இதே நிலை எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வரப்போகின்றது. அபிவிருத்தியின் பெயரால் யாழ்ப்பாண சனத்தொகையின் இனவிகிதாசாரம் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படப்போகின்றது. இதனைத் தடுக்கப்போகின்றோமா? அல்லது 30 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் எவ்வாறு பறிபோனது என்ற வரலாற்றை எழுதப்போகின்றோமா?
.
பொருளியல் ஆசிரியர் சி.வரதராஜன்
(முன்னைநாள் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளர்)

Aug 28, 2012

அபிவிருத்தியின் பெயரால் கிழக்கை இழந்த வரலாறு – பொருளியல் ஆசிரியர் s.வரதராஜன்

////////// கடந்த காலங்களில் தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் பாதிப்பைத் தொடர்ந்து தாய் மண்ணில் சுயமாக தொழில் புரிய வேண்டும் என்ற கொள்கைக்காகப் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் எனும் பதவியினை துச்சமென தூக்கி எறிந்து தன் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தியவர்.

* அன்றிலிருந்து இன்றுவரை எவரிற்கும் அடிபணிந்து நாட்டை விட்டு, மக்களை, தமிழ்ப்பற்றை விட்டு ஓடாது எமது மாணவர் கல்வி முன்னேற்றத்திற்கு வழி சமைத்துக் கொண்டிருப்பவர்.

* இவர் தமிழ் தேசத்தை நேசித்த போதும் மாணவரை கல்வி நோக்கில் மட்டும் வழி நடத்தியவர்.

* தமிழ்த் தேசியத்தைத் தீவிரமாக நேசித்ததன் விளைவாக

* 1988 ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சிறையிலிருந்தவர்.
* 1997 - 1998 காலப்பகுதியில் 4 ம் மாடி, 6 ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர்.
* 2008 ம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையானவர்.

* இவற்றைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் புகலிடம் கோரிச் செல்லாமல் - இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தனது குடும்பத்தோடு தாய் மண்ணில் தொடர்ந்து வாழ்பவர்.
*தமிழ் மக்கள் அனுபவித்த அனைத்துப் பிரச்சினைகளையும் தானும் அனுபவித்து அவர்களோடு தொடர்ந்து வாழ்பவர்/////////////


ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற பதம் முற்றாகவே அற்றுப்போய் அபிவிருத்தி என்ற ஒரு மாயை எமது இனத்தை சூழந்து வரும் இந்த வேளையில் தாயகத்தின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் முன்னெடுத்த அபிவிருத்தியின் விளைவுகள் என்ன?

தற்கால அரசியலில் நாம் சந்திக்கப்போகும் பின்னடைவுகள் என்ன என்பது குறித்து ஆதாரங்கள் மற்றும் வரலாற்றுத் தகவல்களை ஒன்று திரட்டி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் யாழ் மாவட்ட முன்னாள் வேட்பாளரும், பிரபல பொருளியல் விரிவுரையாளருமான திரு சி வரதராஜன் அவர்கள் ஈழம் ஈ நியூஸ் இற்காக (www.eelamenews.com) எழுதும் தொடர் இது.
இலங்கை ஓர் அறிமுகம்
இந்துமா சமுத்திரத்தில் இந்திய உபகண்டத்திற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு சிறிய தீவு இலங்கையாகும்.  1505ல் போர்த்துக்கீசரின் வருகையோடு இத்தீவில் அந்நியராட்சி ஏற்பட்டது. போர்த்துக்கீசரின் வருகையின் போது இத்தீவில் கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என மூன்று அரசுகள் இங்கு காணப்பட்டன.
இதற்கும் மேலாக வன்னி மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்கள் வன்னித் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. வன்னியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பிரதேசங்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லையிலிருந்து கிழக்குக் கரையோரமாக தெற்கே யால – பாணம வரை பரந்திருந்தது. திருகோணமலையும் மட்டக்களப்பும் புவியியல் மற்றும் அரசியல் ரீதியாக ‘வன்னி’ என்று அழைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்புத் தமிழகம் ஆகிய நூல்களை ஆதாரம் காட்டி திருக்கோணஸ்வரம் எனும் நூலில் பின்வரும் விடயம் கூறப்பட்டுள்ளது.
கி.பி.78 காலப்பகுதியில்  மனுநேயகயபாகு மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்த திருக்கோவில், உகந்தை, பாணமை, தம்பிலுவில், பொத்துவில் முதலான இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை உன்னரசுகிரி இராச்சியம் என்றும், மண்முணை, மட்டக்களப்பு, போரைதீவு, கொக்கட்டிச்சோலை, முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை மட்டக்களப்பு  இராச்சியம் என்றும், வெருகல், தம்பைநகர், கொட்டியாபுரம், தட்சணாகிரி (திருகோணமலை) திரியாய் முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை திருகோணமலை  இராச்சியம் என்றும் வகுக்கப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளை ஈழநாட்டின் கிழக்குப் பகுதி கொண்டிருந்தது.
1591ல் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தின்மீது படையெடுத்து மன்னன் புவிராஜசிங்கனைக் கொன்று அதனைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தமக்கு ஆதரவான எதிர்மன்ன சிங்கன் என்பவனை யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாக முடிசூட்டினர். 1616ல் இவனின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டாம் சங்கிலி மன்னன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
இவன் போர்த்துக்கீசரின் ஆதிக்கத்தை ஏற்கமறுத்து அவர்களுக்கு எதிராகப் போராடினான். இதனைத் தொடர்ந்து போர்த்துக்கீசர் சங்கிலி மன்னன் மீது படையெடுத்து 1620ல் அவனைச் சிறைபிடித்து கொழும்பிற்குக் கொண்டு சென்றனர். இதன் பின்னர் யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாகவும் நேரடியாகவும் போர்த்துக்கலின் முடியாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
1593ல் முதலாம் இராஜசிங்கனின் மரணத்துடன் ஏற்பட்ட சீதாவாக்கை இராச்சியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இத்தீவின் தென்மேற்குக் கரையோரப் பிரதேசம் முழுவதும் போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.  கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்த தர்மபால போர்த்துக்கீசரின் கைப்பொம்மையாகவே இருந்தான்.
1597ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி தர்மபாலாவின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் சட்டரீதியாக கோட்டை இராச்சியம் போர்த்துக்கலின் முடியாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வகையில் யாழ்ப்பாண இராச்சியம், கோட்டை இராச்சியம் என்பன தமது சுதந்திரத்தினை போர்த்துக்கீசரிடம் இழந்தன. கண்டி இராச்சியம் தொடர்ந்தும் சுதந்திர அரசாக விளங்கியது.
போர்த்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் முழுவதனையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தபோதிலும் தமிழர் பிரதேசங்களையும் சிங்களவர் பிரதேசங்களையும் ஒன்றாக இணைக்கவில்லை. இவ்விரண்டு பிரதேசங்களும் தனித் தனியாகவே நிர்வகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1656ம் ஆண்டு மே மாதம்  கொழும்புத் துறைமுகம் டச்சுக்காரரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து இத்தீவில் டச்சுக்காரரின் ஆட்சி ஆரம்பமாகியது. எனினும் முழுமையாகப் போர்த்துக்கீசரை இத்தீவிலிருந்து வெளியேற்றுவதற்கு டச்சுக்காரருக்கு மேலும் இரண்டாண்டுகள் எடுத்தது.
1658ம் ஆண்டு யூன்மாதம் யாழ்ப்பாணம் டச்சுக்காரரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இத்தீவின்மீது போர்த்துக்கீசருக்கு இருந்த கடைசிப்பிடியும் தளர்ந்தது. எனினும் தொடர்ந்தும் கண்டி இராச்சியம் சுதந்திர அரசாக விளங் கியது. டச்சுக்காரர் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிர்வாக ரீதியாக மூன்றாக வகைப்படுத்தினர்.
1. யாழ்ப்பாண நீதி மாவட்டம்
2. கொழும்பு நீதி மாவட்டம்
3. காலி நீதி மாவட்டம்
யாழ்ப்பாண நீதி மாவட்டம் என்பது தமிழர் பிரதேசங்களான இன்றைய வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது. எனவே டச்சுக்காரரும் கூட தமிழர் பிரதேசங்களை இத்தீவின் ஏனைய பிரதேசங்களோடு இணைக்காமல் தனியான நிர்வாகப் பிரதேசமாக வைத்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
1
1796ம் ஆண்டு இத்தீவின் கரையோரப் பிரதேசங்களை டச்சுக்காரரிடமிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக்கம்பனி கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சி இத்தீவில் உதயமாகியது. திருகோணமலை 1797 ஆகஸ்டிலும், மட்டக்களப்பு செப்டெம்பரிலும், யாழ்ப்பாணம் சில நாட்களின் பின்னரும் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தது.
குறுகிய காலத்தில் மன்னாரும் அவர்கள் வசமாகி, பிரித்தானியர் கரையோரமாக முன்னேறி வழியில் நீர்கொழும்பைத் தமதாக்கி, கொழும்பிற்கு அண்மையிலுள்ள களனி கங்கையை 1798 பெப்ரவரியில் கடந்தனர். அதே ஆண்டு பெப்ரவரி 15ம் திகதியன்று கொழும்பு வீழ்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் டச்சுக்காரரின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இத்தீவு முழுவதும் பிரித்தானியரின் ஆளுகைக்கு உட்பட்டது. எனினும் ஏனைய பிரதேசங்களைப்போல கண்டி இராச்சிய மக்களும் கண்டிப் பிரதானிகளும் ஆங்கிலேயே ஆதிக்கத்தினை இலகுவில் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆங்காங்கே ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பிய வண்ணம் இருந்தது. வெல்லச என்ற பகுதியில் முஸ்லீம் ஒருவர் மக்கட் பிரதானியாக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டார். பிரித்தானியரின் பிரித்தாளும் இத்தந்திரம் கண்டிப் பிரதானிகள் மத்தியில் வெறுப்புணர்வினை ஏற்ப டுத்தியது. இதன் உச்சக்கட்டமாக ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சி 1817-1818 காலப்பகுதியில் கண்டிய மாகாணங்களில் வெடித்தது. ஊவா, வெல்லச பகுதிகளிலேயே இப் புரட்சியின் மையம் காணப்பட்டது.
ஆங்கிலேயப் படைகள் எங்கெங்கே சிறுகுழுக்களாக செயற்பட்டு வந்தனவோ அங்கெல்லாம் அக்குழுக்கள் இனங்காணாதவர்களால் திடீர் திடீரெனக் கொல்லப்பட்டனர். கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு அழிக்கமுடியாத நிலையில் ஆங்கிலேயப் படைகள் பொதுமக்களைத் தாக்கியதுடன் அவர்களின் குடியிருப்புக்களையும் அழித்தனர்.
இதன்மூலம் மக்கள் மனதில் பயத்தினை ஏற்படுத்தி அவர்கள் மத்தியில் கெரில்லாப் போராளிகளுக்கு இருந்த ஆதரவினை அழிப்பதற்கு ஆங்கிலேயப் படைகள் முற்பட்டன. இறுதியில் இந்தியாவிலிருந்து படைகளை வரவழைத்தே ஆங்கிலேய ஆட்சியாளரால் இப்புரட்சியினை அடக்கக்கூடியதாக இருந்தது.
அது மட்டுமன்றி இப்புரட்சியினை முன்னின்று நடத்திய கெப்பிட்டிப்பொல என்பவனோடு இணைந்து போராடிய மடுகல்ல என்ற மக்கட் பிரதானி தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிந்து சென்று தனிப்படை ஒன்றை அமைத் தான். இச் செயற்பாடும் இப்புரட்சியின் தோல்விக்கு ஒரு  காரணமாக அமைந்தது. 1818 செப்டம்பர் மாதமளவில் ஊவா, வெல்லச பகுதிகளை அரசாங் கம் தோற்கடித்ததைத் தொடர்ந்து புரட்சியாளர்கள் மாத்தளை, தும்பறை, நுவரகலாவிய (அனுராதபுரம்) ஆகிய பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர்.
1818 ஆம் ஆண்டுக்கலவரமும் அதனைத்தொடர்ந்து மக்கள் எழுச்சி யும் ஆள்பவர்களின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வொன்றினை ஏற்படுத்தியது. இதனால் கொரில்லாப் போர் முறையில் ஆற்றல் கொண்டிருந்த விடுதலை வீரர்களின் புகலிடமாக இருந்த மத்திய மலை நாட்டை ஏனைய பிரதேசங்களுடன் இணைப்பது என அரசாங்கம் தீர்மானித்தது. இவ்விணைப் பினை பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1820ம் ஆண்டு இலங்கையின் ஆளுநராக பதவியேற்ற திரு. எட்வேட் பார்ண்ஸ் என்பவர் அன்றைய இலங்கையின் முதல் மூன்று தேவைகள் என்ன என்பது பற்றிப் பின்வருமாறு கூறினார்.
முதல் தேவை வீதிகள். இரண்டாவது தேவை வீதிகள். மூன்றாவது தேவை வீதிகள். இன்று இலங்கையில் காணப்படும் பல வீதிகள் இவருடைய காலத்தி லேயே அமைக்கப்பட்டவையாகும். 1821ம் ஆண்டு கொழும்பு – கண்டி வீதி திறக்கப்பட்டது.
இக் கண்டி வீதியிலிருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் வரை கிளைகள் திறக்கப்பட்டன. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கோமாரி ஆகிய பிரதேசங்களும், தெற்கே அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி ஆகிய பிரதேசங்களும், மேற்கே களுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் ஆகிய பிரதேசங்களும் வீதிகள் மூலம் கண்டிப் பிரதேசங்களோடு இணைக்கப்பட்டன.
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில்  வடக்கையும் கிழக்கையும் இணைத்து எந்தவொரு வீதியினையும் ஆங்கிலேயர் அமைக்கவில்லை. கண்டிப் பிரதேங்களை இலங்கையின் கரையோரப் பிரதேசங்களோடு இணைத்து கண்டி இராச்சியத்தின் தனித்துவத்தினை அழித்தொழிப்பதை ஒரு முக்கிய நோக்காகக் கொண்டு ஆங்கிலேயர் வீதிகளை அமைத்தனர்.
இதனால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களையும் வீதிகளால் இணைக்க வேண்டிய தேவை ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை. ஆனால் இலங்கையின் சுதந்திரத்தின் பின் அரைநூற்றாண்டு கழிந்த பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து கரையோரமாக வீதியை அமைக்கவில்லை. கண்டி இராச்சியத்தின் தனித்துவத்தினை அழிப்பதற்காகவே கண்டிப் பிரதேசத்தோடு இலங்கையின் ஏனைய பிரதேசங்களை இணைத்து ஆங்கிலேயே அரசாங்கம் வீதிகளை அமைத்தது.
மறுபுறம் தமிழ் இராச்சியத்தின் தனித்துவத்தினை அழிப்பதற்காகவே இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து வீதியை அமைக்கவில்லை. இன்றும் வடக்குக்கும் கிழக்குக்குமிடையிலான வீதிப் போக்குவரத்து சிங்களப் பிரதேசங்களின் ஊடாகவே நடைபெறுகின்றது என்பது கசப்பான உண்மையாகும்.
ஒருபுறம் 1821-1831 காலப்பகுதியில் வீதி அமைப்பினூடாக கண்டிப் பிரதேசங்களை இலங்கையின் ஏனைய பிரதேசங்களோடு இணைத்த ஆங்கி லேய அரசாங்கம், மறுபுறம் நிர்வாகரீதியாக நாட்டை ஒன்றுபடுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. 1820களில் பிரித்தானிய அரசாங்கம் இலங் கையின் நிர்வாகத்தை விசாரிப்பதற்காக ஒரு ஆணைக்குழுவை உருவாக்கத் தீர்மானித்தது.
மேஜர். கோல்புறூக் என்பவரை ஆணையாளராகக் கொண்ட அரச ஆணைக் குழுவொன்று 1928 ஜனவரி 18ம் திகதியன்று நியமிக்கப் பட்டது. கோல்புறூக் இலங்கைக்கு 1829 ஏப்ரல் 11ம் திகதி வந்தார். இவரோடு இணைந்து பணியாற்றுவதற்காக திரு.சார்ல்ஸ் கமறோன் என்ற நீதி நிர்வாக ஆணையாளர் 1830 ஏப்ரல் 30ம் திகதி இங்கு அனுப்பப்பட்டார்.
இலங்கையின் நிர்வாக அமைப்பு, குடியேற்ற அரசாங்கத்தின் வருமானம் என்பன தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளமாறு கோல்புறூக் பணிக்கப்பட்டார். இலங்கையின் நீதி பரிபாலனம் தொடர்பான அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு சார்ல்ஸ் கமறோனிடம் விடப்பட்டது.
இவ்விரண்டு ஆணையாளர்களும் 1831 பெப்ரவரி 3ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் இங்கி லாந்து சென்று மூன்று பிரதான அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தனர்.
1831 டிசம்பர் 24ல் நிர்வாகம் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
1832  ஜனவரி 31ல் வருமானம் பற்றிய அறிக்கையும் .
நீதி நிர்வாகமும் நடைமுறையும் பற்றிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன.
இவ் அறிக்கைகளே கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்படுகின்றது.
1833ம்ஆண்டு கோல்புறூக்-கமரன் ஆணைக்குழுவின் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. கோல்புறூக்கினால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாக முறையினை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமாக 1-10-1833ல் நிர்வாகரீதியாக இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
ஆனால் இவ்வாறு 1833ல் இலங்கை நிர்வாகரீதியாகப் பிரிக்கப்பட்டது என்று கூறுவது தவறானதாகும்.உண்மையில் கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம் மற்றும் வன்னிச் சிற்றரசுகள் என்பன ஐந்து மாகாணங்கள் என்ற பெயரில் 1833ல் ஒன்றிணைக்கப்பட்டது. 1833ம் ஆண்டிலிருந்து இலங்கை ஒரே நிர்வாக அலகாக தொடர்ந்து ஆட்சி செய்யப்படலாயிற்று.
1833ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐந்து மாகாணங்களும்  அவற்றின் தலைநகரங்களும் பின்வருமாறு
1. வட மாகாணம் –   யாழ்ப்பாணம்
2. கிழக்கு மாகாணம் – திருகோணமலை
3. மேல் மாகாணம் –   கொழும்பு
4. தென் மாகாணம்   – காலி
5. மத்திய மாகாணம் – கண்டி
2
இவ்வாறான நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கியதற்கான முதற் காரணம் நிர்வாக செயற்திறனை அதிகரிப்பதற்காக இருந்தபோதிலும் அதிக பட்சமான பொருளாதார, அரசியல் நலன்களைப் பெறுவதற்காக, சட்டம் ஒழுங்கு என்பவற்றைக் கொண்டதொரு ஆட்சியை மேலும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காவும் இதைச் செய்தனர்.
1818 ஆம் ஆண்டுக் கண்டிக் கலவரமும் அதனைத்தொடர்ந்து மக்கள் எழுச்சியும் ஆள்பவர்களின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வொன்றினை ஏற்படுத்தியது. இதனால் கொரில்லாப் போர் முறையில் ஆற்றல் கொண்டிருந்த விடுதலை வீரர்களின் புகலிடமாக இருந்த மத்தியமலை நாட்டை ஏனைய பிரதேசங்களுடன் இணைப்பது என அரசாங்கம் தீர்மானித்தது.
இப்பின்னனியிலேயே மாகாண எல்லைகள் வகுக்கப்பட்டன. கண்டி இராச்சியத்தின் பிரதேசங்கள் சிதறடிக்கப்பட்டு, கரையோரப் பிரதேசங்களோடு  இணைக்கப்பட்டது. எஞ்சிய கண்டி இராச்சியப் பிரதேசங்கள் மத்திய மாகாணமாக மாற்றப்பட்டது.
1845ம் ஆண்டுவரை இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டி ருந்தது. 1-10-1845ல் மேல் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1. மேல் மாகாணம்
2.  வடமேல் மாகாணம்
1845ம் ஆண்டு வடமேல் மாகாணம் உருவாக்கப்பட்டமைக்கு பின்வருமாறு காரணம் கூறப்படுகின்றது.
சந்தர்ப்பத்திற்கேற்றவாறு அரசியற்காரணங்களுக்காக பழைய கண்டி இராச்சியத்தின் மாகாணப் பிரிவுகளை வேறாகப் பிரிப்பதன் மூலம் கண்டி மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடியும்.
மாகாண எல்லைகள் என்ன அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பதனை இதன்மூலம் அறியமுடிகின்றது. தமது ஆதிக்கத்தினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களையும் மண்ணையும் பிரித்தாளுவது பிரித்தானியருக்கு கைவந்தகலை. ஆங்கிலேயரிடம் கற்ற இப் பாடத்தினை குருவை மிஞ்சிய சீடனாக இலங்கை அரசாங்கம், தமிழ் பேசும் மக்களையும் அவர்களது மண்ணையும் தந்திரமாகப் பிரித்தாளுகின்றது.
06-09-1873ல் வடமத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. வடமாகாணத் திலிருந்து நுவரகலாவிய மாவட்டம் (தற்போதைய அனுராதபுர மாவட்டம்), கிழக்கு மாகாணத்திலிருந்து தமன்கடுவ மாவட்டம் (தற்போதைய பொல நறுவை மாவட்டம்), வடமேல் மாகாணத்திலிருந்து ஏழுகோறளையின் தமிழ்ப்பற்றுப் பிரதேசம் (தெமளப்பற்று) என்பவற்றை இணைத்து வடமத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது.
05-02-1886ல் மத்திய மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1. மத்திய மாகாணம்
2.  ஊவா மாகாணம்
04-01-1889ல் மேல் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1. மேல் மாகாணம்
2.  சப்பிரகமுவ மாகாணம்
இம் மாற்றங்களைத் தொடர்ந்து இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உருவாகின.
3
பிரித்தானியராட்சிக்காலத்தில் தமிழர் பிரதேசங்கள் சிங்களவர் பிரதே சங்களோடு இணைக்கப்பட்ட போதிலும் தமிழர் பிரதேசங்கள் தனிப் பிரதேசங்களாக அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டிருந்தன. பிரித்தானிய குடியேற்ற அரசாங்கத்தில் முதற் செயலதிபராக 1799ல் பதவியேற்ற சேர் எச். கிளைய்கோன் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பத்தில் தீவின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் தமிழர் தாய்நிலம் இருந்ததெனக் குறிப்பிடுகின்றார்.
1827ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் தமிழ் மாவட்டங்கள், சிங்கள மாவட்டங்கள் என இரண்டாகப் பிரித்து சனத்தொகை காட்டப் பட்டுள்ளது. தமிழ் மாவட்டங்கள் என்பதன் கீழ் பின்வருவன உள்ளடக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மன்னார் நெடுந்தீவு
1834ம் ஆண்டு வெளியிடப்பட்ட Ceylon Gazetter என்ற நூலில் தமிழ் பிரதேசங்களும் சிங்களப் பிரதேசங்களும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.
கி.பி.78 காலப்பகுதியில்  மனுநேயகயபாகு மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்த திருக்கோவில், உகந்தை, பாணமை, தம்பிலுவில், பொத்துவில் முதலான இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை உன்னரசுகிரி இராச்சியம் என்றும், மண்முணை, மட்டக்களப்பு, போரைதீவு, கொக்கட்டிச்சோலை, முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை மட்டக்களப்பு  இராச்சியம் என்றும், வெருகல், தம்பைநகர், கொட்டி யாபுரம், தட்சணாகிரி (திருகோணமலை) திரியாய் முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை திருகோணமலை  இராச்சியம் என்றும் வகுக்கப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளை ஈழநாட்டின் கிழக்குப் பகுதி கொண்டிருந்தது.
இரு வேறு தேசியங்கள் மிகவும் புராதன காலத்திலிருந்தே தமக்கான நிலவுடமையினைத் தமக்குள் பிரித்து வைத்திருக்கின்றனர். இவற்றுள் முதலாவதான சிங்களவர் நாட்டின் உட்பகுதியில் அதாவது வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையிலான தெற்கு, மேற்குப் பகுதிகளில் வசித்தனர். இரண்டாவதான மலபார்கள் (தமிழர்) வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தனர்.
இவ்விரு தேசியங்களும் தத்தம் மதம், மொழி, பழக்க வழக்கங்கள் என்பவற்றில் முற்றுமுழுதாக வேறுபட்டவர்கள்.
தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் வட கிழக்குப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். மாகம்பற்று – குமுக்கன் ஆற்றினை எல்லையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தைச் சுற்றி புத்தளத்தின் தெற்கு எல்லைவரை அவர்களது மாவட்டங்கள் பரந்திருந்தன.
மாகம்பற்று – குமுக்கன் ஆற்றிலிருந்து வடக்கெல்லையாக சிலாபம் வரையுள்ள கரையோரப் பிரதேசங்களிலும் உட்புற மாவட்டங்களிலும் சிங்களவர்கள் வாழ்கின்றனர்.
1831ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் போது இலங்கையின் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் பின்வரும் மூன்று பிரதேசங்களாக வகைப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
சிங்கள மாவட்டங்கள் 448361
கொழும்பு 234791
காலி    88242
தங்காலை 95582
சிலாபம் 29746
தமிழ் மாவட்டங்கள் 213641
யாழ்ப்பாணம் 146528
திருகோணமலை 16335
மட்டக்களப்பு 27574
மன்னார் 20257
நெடுந்தீவு 2947
கண்டி மாகாணங்கள்    288486
இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் வரலாற்றுரீதியாக தமிழர் தாயகமாகவே இருந்து வந்துள்ளது. அரசாங்கத்தினால் மேற்கொள் ளப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் (தமிழர் தாயகத்தின் தென்பகுதியான கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர் – முதற்தரக் குடிமக்கள் எவ்வாறு இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டனர் என்பதனை அடுத்துவரும் தொடர்களில் பார்ப்போம்.
தொடரும்..
பொருளியல் ஆசிரியர் s.வரதராஜன்
(முன்னைநாள் போராதனைப் பல்கலைக்கழக  பொருளியற்துறை விரிவுரையாளர்)
இந்த கட்டுரை தொடர்பான உங்களின் கருத்துக்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:
varatharajaninfo@gmail.com


Aug 16, 2012

நாஸ்ரடாமஸ் மர்ம மனிதன்


உலகில் பைபிளுக்கு அடுத்த படியாக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் என்ன தெரியுமா? “த செஞ்சுரீஸ்” (The Centuries) எனப்படும் நாலடிப்பாடல்களால் வரிக்கப்பட்ட புத்தகம்தான். இதனை எழுதியவர்தான் தீர்க்கதரிசி ”நஸ்ட்ரடாமஸ்”.
1568 ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் மூலப்பிரதி அச்சிடப்பட்டது, என்னதான் எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் காணப்பட்டாலும் சொல்லப்பட்ட விடயங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது.

த செஞ்சுரீஸ் இல் நஸ்ட்ரடாமஸ்சால் எதிர்வுகூறப்பட்டவைகள்
01. 1999 ஆம் ஆண்டு ஏழாம் மாதம்
அச்சத்தை ஊட்டுகிறவன் ஆகாயத்தில் இருந்து வருவான்
மோனிகோல் அரசுக்கெதிராய் மூழும் பயங்கரம் – அதன் முன்னும்பின்னும் செவ்வாயின் ஆதிக்கம்
கடகராசியில் நாற்ப்பத்து ஐந்து டிகிரி நடக்குமந்த பேரழிவு – (10:72)
இத உலகவர்த்தகமையத் தாக்குதலை எதிர்வுகூறும் நிகழ்வாக கருதப்படுகின்றது.
செஞ்கிஸ்த்தான் என்றொரு பயங்கர அரசன் மங்கோலியாவை ஆண்டுவந்தான் அதனால் தீவிரவாதிகளைக்குறிக்க மோனிகோல் என்ற வார்த்தைப்பிரயோகம் நஸ்ட்ரடாமசால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
உலக வரைபடத்தில் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் 40 – 45 டிகிரியி அட்சர ரேகையில் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
பிரஞ்சுக்காரரானா நஸ்ட்ரடாமஸ்சின் பிரஞ்சுமொழியிலான இரகசியக்குறிப்புக்கள் ஆங்கிலேய மொழிபெயர்ப்பாளர்களால் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டமையால் அவர்களின் மொழிபெயர்ப்பின் போது பல தவறுகள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படிகின்றது, இதனால் ஏற்பட்ட தவறான விளக்கள்களாலும் கால நேர அளவிடைப் பிழைகளாலும் அழிவுகளைத்தடுக்க முடியாமல் போய்விடுகின்றது.
அமெரிக்க நிகழ்வோடு சம்பந்தப்படுகின்ற வேறுபட்ட செய்யுள்களும் நஸ்ட்ரடாமஸின் குறிப்புகளில் உள்ளன, அவை இவ்வாறு சொல்கின்றன,
”மக்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஒருநாள் காலையில் மிகக்கொடிய நெருப்பு ஆகாயத்தில் எழுந்தது. ஆர்ட்டிக்கின் வடக்கே உள்ள நாட்டில் அழிவும் மரனமும் நேரும்” (2:91)
“பூமியின் நடுப்பகுதியில் இருந்து கிழம்பும் தீயானது உலகை அதிரவைக்கும் வண்ணம் அந்தப் புதிய நகரத்தின் கோபுரங்களைத் தகர்த்து கலக்கத்தை உருவாக்கும்” (1:87)
புதிய நகரத்தில் 40 – 45 டிகிரி அளவில் ஆகாயத்தில் இருந்து அனல் மழை பொழியும் அதன் பாதிப்பு வெகுதூரத்திற்குப் பரவும் அவர்கள் சான்றுகள் கேட்பார்கள், எங்குபார்த்தாலும் ஒரு கொடிய பயங்கரம் நிலவும், காரணமானவர்கள் எங்கேனும் மறைந்துகொள்வார்கள், வல்லரசுகள் கடுங்கோபங்கொள்ளும்” (6:97), (5:65).
இவ்வாறான தகவல்கள் நஸ்ட்ரடாமஸ் இனால் உலகவர்த்தக மைய அழிவுபற்றி எச்சரித்து எதிர்வுகூறப்பட்டிருந்தன.
02. முதலாம் எலிசபெத்
யார் தூக்கி எறியப்பட்டாளோ அவள் ஆட்சிக்கு மறுபடியும் வருவாள், அவளுடைய பகைவர்கள் சதியாலோசனையில்
இருக்கிறார்கள், அவளது ஆட்சியானது முன்னெப்போதையும் விட வெற்றிகரமானதாக இருக்கும், அவளது மரணம் அவளது எழுபத்தி மூன்றாவது வயதில் கண்டிப்பாக நிகழும் (C.VI.74)
தன்னுடைய குழந்தைப்பருவத்தில் புறக்கணிக்கப்பட்டவள்தான் இந்த முதலாம் எலிசபெத், அவளுடைய சகோதரியின் ஆட்சியுன் போது சதிக்கு இலக்கானவள், எலிசபெத்தின் ஆட்சியுன் போது இங்கிலாந்து அபரிமிதமான வளர்ச்சி அடைந்தது, நஸ்ட்ரடாமஸ் சொன்னதுபோல அவள் தனது எழுபத்தி மூன்றாவது வயதில் இறந்துவிட்டாள்.
03.கென்னடி சகோதரர்களின் படுகொலை
“புகழ் பெற்ற அந்த மனிதன் பகல்ப் பொழுதில் ஓர் இடிமின்னல் தாக்கி அழிவான்” (C.I.26)
ஜோன். எப்.கென்னடி 1963 நவம்பர் 22 அன்று சுடப்பட்டு இறந்தார், 1968 ஜீன் 5 அவருடைய சகோதரர் ராபர்ட்.எப்.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார்.
“போருக்கு பின் அந்த மனிதன் வீழ்வான் அவன் உன்னதமானவன், அவனுடைய மரணம் திடீரென்று சம்பவிக்கும், அவன் பிறக்கும் போதே துறையோடு பிறப்பான், ஆற்றங்கரையோரத்திலே இரத்தக் கறை படியும்” (C.II.57)
ஜோன்.எப்.கென்னடி பிறக்கும்போதே நோயால் பாதிக்கப்பட்டவர், பிறரை கவர்ந்திளுக்கும் ஆழுமை அவரிடம் இருந்ததாக அவரைப்பற்றிய விமர்சனங்கள் சொல்லின்றன, கியூபாவில் ரஸ்ய அதிபர் க்ருஷ்சாவ் ஆயுதத்தளம் அமைக்க முயன்றார் அதனால் ஏற்பட்ட மோதலுக்குப் பின் டல்லாஸ் நகரில் கென்னடி கொல்லப்பட்டர்.